"முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில்".. செய்த வேலைகளை "லிஸ்ட்" போட்ட சென்னை மாநகராட்சி!
சென்னை: மழை வெள்ளத்தால் சின்னாபின்னமாகிப் போன சென்னை நகரில் செய்த நிவாரணப் பணிகள், நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பதை அதில் மாநகராட்சி விளக்கியுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில்
தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் மீட்புப்பணியை தொடர்ந்து, நிவாரணப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகளை சென்னை மாநகராட்சியும், மற்ற துறைகளும் இணைந்து போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது.

199 முகாம்கள்
பாதிக்கப்பட்ட மக்கள் 199 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களிலிருந்து வரும் நிவாரணப் பொருட்கள் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு வருகிறது. இதனை முகாம்களில் தங்கியுள்ள குடும்பத்தினருக்கு தனித்தனி பைகளில் போட்டு வழங்கப்படுகிறது. நேற்று வரை 26 லட்சத்து 59 ஆயிரத்து 710 பொருட்கள் பெறப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து 4 நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது.

300 பம்புசெட்டுகள் வாங்கினோம்
தொடர் மழையினால் ஏற்பட்ட 859 நீர்தேக்கங்களில் 787 நீர்தேக்கங்களின் நீர் வெளியேற்றப்பட்டன. மீதமுள்ள நீர்தேக்கங்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற டெல்லியிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட ராட்சத மோட்டார் பம்புகள் மற்றும் புதிதாக வாங்கப்பட்டுள்ள 300 பம்பு செட்டுகளையும் கொண்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முதல்வர் உத்தரவுப்படி
முதல்வர் உத்தரவுப்படி 9 மாநகராட்சிகள், 23 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிருந்தும் பணியாளர்கள் சுகாதார ஆய்வாளர்கள் என மொத்தம் 2,600 பேர் 57 வாகனங்களில் வரவழைக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 584 வாகனங்களுடன் 22,500 துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

71 சூப்பர் சக்கர் வாகனங்கள்
இந்த பணியில் 71 சூப்பர் சக்கர் வாகனங்கள், 111 ஜெட் ரோடிஸ் மெஷின்கள், 29 ஜே.ஆர்.எஸ்., 200 தூர்வாரும் எந்திரங்கள், 49 தீயணைப்புத்துறை வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் சென்னையில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் கழிவுகள் சேர்ந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அவற்றை முழுவதுமாக அகற்றிட உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறப்பு தூய்மைப்படுத்தும் பணி
வெளி மாவட்டங்களிலிருந்து கூடுதலாக 323 டிப்பர் லாரிகளும், 96 ஜே.சி.பி. இயந்திரங்களும், 6,250 துப்புரவு பணியாளர்களும் வரவழைக்கப்பட்டு 2 நாட்களாக சிறப்பு தூய்மை படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கடந்த 6ம் தேதியன்று 4,890 மெட்ரிக் டன் குப்பைகளும் (மழை), 7ம் தேதி 7,888.5 மெட்ரிக் டன்னும், 8ம் தேதி 8,069.1 மெட்ரிக் டன் குப்பைகளும் அகற்றப்பட்டுள்ளன. விரைவில் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளியிலுள்ள குப்பைகள் 100 சதவீதம் அகற்றும் பணி நிறைவு பெறும். நேற்று மட்டும் 222 மருத்துவ முகாம்கள், 97 நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 49,329 பேர் பயன் பெற்றுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications