சபாஷ் சென்னை மாநகராட்சி.. 10ம் வகுப்பு தேர்வில் 95% தேர்ச்சி பெற்று கலக்கிய மாணவ மணிகள்!
சென்னை: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவியரில் 95 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து அசத்தியுள்ளனர். அவர்களுக்கு மேயர் சைதை துரைசாமி நேரில் அழைத்து பாராட்டி பரிசுகளை வழங்கி கெளரவித்தார்.
சென்னை மாநகராட்சி அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா ரிப்பன் மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் பி.சந்திரமோகன் விழாவுக்கு முன்னிலை வகித்தார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மேயரும், கமிஷனரும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.

மாணவ-மாணவிகளின் சாதனைகள் குறித்து மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:
- பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 70 சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.
- இதில் 3,029 மாணவர்கள், 3,579 மாணவிகள் என மொத்தம் 6,608 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்கள்.
- அதில், 2,803, 3,470 மாணவிகள் என மொத்தம் 6,273 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- இந்த வருட தேர்ச்சி விகிதம் 95 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டை காட்டிலும் 3 சதவீதம் அதிகமாகும்.
- சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் எஸ்.புவனேஸ்வரி, எம்.இ.அனிதா ஆகியோர் 492 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளனர்.
- கோயம்பேடு சென்னை மேல்நிலைப்பள்ளியின் எம்.ஜெயப்பிரியா, சைதாப்பேட்டை மல்வின் ரோஷன் தலா 489 மதிப்பெண்கள் பெற்று 2வது இடம் பெற்றுள்ளனர்.
- பெரம்பூர் மார்க்கெட் தெரு சென்னை மேல்நிலைப்பள்ளி மாணவி சிந்தியா 488 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தை பெற்றுள்ளார்.
- பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவ-மாணவிகளில் 56 பேர் சமூக அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.
- 15 பேர் கணிதத்திலும், 7 பேர் அறிவியல் பாடத்திலும் என மொத்தம் 78 மாணவ-மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
- 1149 மாணவ-மாணவிகள் 400-க்கு அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
- 250 மாணவ-மாணவிகள் 450-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
- சென்னை பெருநகர மாநகராட்சி பள்ளிகளில் 19 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
- இந்த பள்ளிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ள 48 வகையான திட்டங்கள் மற்றும் சலுகைகள் காரணமாக சென்னை பெருநகர மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்றார் அவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications