ஆவின் முறைகேடு தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்ட விவகாரம் : விஜயகாந்திற்கு கோர்ட் சம்மன்
சென்னை: தமிழக பால்வளத்துறை அமைச்சர் ரமணா தொடர்ந்த அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 21ம் தேதி விஜயகாந்த் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.
நாட்டையே உலுக்கிய ஆவின் முறைகேடுகள் தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வாயிலாக வலியுறுத்தியிருந்தார். இத்தகவல் ஊடகங்களிலும் வெளியானது.
அதனைத் தொடர்ந்து, விஜயகாந்தின் இந்த பேட்டி தமிழக அரசின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ரமணா சார்பில் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப் பட்டது.

அதில், ஆவின் பால் விலை ஏற்றத்துக்கு முன்பு கொள்முதல் அளவு 20.64 லட்சம் லிட்டராக இருந்தது. அதன் பிறகு கடந்த 23-ஆம் தேதி நிலவரப்படி 24.88 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. இது தெரியாமலும், அடிப்படை ஆதாரம் இல்லாமலும் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், உள்நோக்கத்துடன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அறிக்கை வெளியிட்ட விஜயகாந்த் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அதில், வரும் ஜனவரி 21ம் தேதி விஜயகாந்த் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பாக விஜயகாந்த்திற்கு சம்மனும் அனுப்பப் பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications