பெண் நோயாளிகளை ஆபாசமாக படம் எடுத்த சென்னை மருத்துவர் கைது- குவியும் புகார்கள்!
பெண் நோயாளிகளை ஆபாசமாக படம் எடுத்த சென்னை மருத்துவர் சிவகுருநாதன் கைது.
Recommended Video

சென்னை: சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளிகளை ஆபாசமாக வீடியோ எடுத்த சென்னை மயிலாப்பூர் மருத்துவர் சிவகுருநாதன் (வயது 64) போலீசார் கைது செய்தனர். மருத்துவர் சிவகுருநாதன் பல பெண்களை சீரழித்ததாகவும் புகார்கள் குவிந்துள்ளன.
சென்னை மயிலாப்பூர் நாட்டுசுப்பராயன் வீதியில் ஆர்.எம். கிளினிக்கை நடத்தி வந்தவர் மருத்துவர் சிவகுருநாதன். இவருக்கு இரண்டு மகள்கள். இருவருமே மருத்துவர்கள்.

மயிலாப்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நெஞ்சுவலிப்பதாக சிவகுருநாதனிடம் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது இளம்பெண்ணின் மேலாடையை கழற்ற வேண்டும் என சிவகுருநாதன் கூறியிருக்கிறார்.
அதேநேரத்தில் செல்போன் கேமராவை ஆன் செய்தும் மேஜை மீது வைத்திருக்கிறார் சிவகுருநாதன். இதனால் சந்தேகமடைந்த அந்த பெண், வெளியில் இருந்த கணவரிடம் சிவகுருநாதன் பற்றி கூறினார்.
இதையடுத்து சிவகுருநாதன் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சிவகுருநாதன், சிகிச்சைக்கு வந்த நோயாளிகளை ஆபாசமாக படம் எடுத்து வைத்தது தெரியவந்தது.
தற்போது சிவகுருநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மேலும் பல பெண்களை சீரழித்ததாக போலீசில் புகார்கள் குவிந்து வருகின்றன.,
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications