பிரபல ரவுடி “கொடுங்கையூர் முட்டை ரவி” துப்பாக்கி முனையில் கைது
சென்னை: கொடுங்கையூரை கலக்கிய ரவுடி முட்டை கோபி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை கொடுங்கையூரை கலக்கிய ரவுடி முட்டை கோபியை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.சென்னை மணலி, சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோபி என்ற "முட்டை" கோபி. பிரபல ரவுடியான இவர் சென்னை கொடுங்கையூர், மாதவரம் போன்ற பகுதிகளில் கடும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்தார்.
கொலை, கொள்ளை, கொலைமுயற்சி, மாமூல் வசூல் என்று பயங்கரமாக கலக்கி வந்தார். 3 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றுள்ளார். இவர் மீது 15 வழக்குகள் உள்ளது.
கொடுங்கையூரைச் சேர்ந்த சரவணன் என்பவரை கொலை செய்த வழக்கு இவர் மீது உள்ளது. இவரை கைது செய்யும்படி கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், கமல்மோகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் ரவுடி முட்டை கோபியை தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் கொடுங்கையூரில் மோட்டார்சைக்கிளில் வந்த முட்டைகோபியை மடக்கினார்கள். அவர் போலீசாரை பார்த்ததும் அரிவாளை தூக்கினார். பதிலுக்கு போலீசார் துப்பாக்கியை தூக்கினார்கள். இதனால் முட்டைகோபி போலீசாரிடம் சரண் அடைந்துவிட்டார். அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தனக்கு எதிரியான இன்னொரு ரவுடியை தீர்த்துக்கட்ட ரவுடி முட்டை கோபி சதித்திட்டம் தீட்டி செயல்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. "ரவுடிகள் வேட்டை தொடரும்" என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications