வங்க கடலில் புதிய புயல்: சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை: வங்கக் கடலில் குறைந்த தாற்றழுத்தத் தாழ்வு நிலையால் கனமழை நீடிக்கும் என்பதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவான ஓகி புயல் அரபிக் கடலுக்கு சென்றுவிட்டது. ஆனால் ஓகி புயல் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் நிலை என்ன என்பது இன்னமும் உறுதியாக தெரியவில்லை. இந்த நிலையில் வங்க கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலையானது வலிமையான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனிடையே வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதால் சென்னை மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மீனவர்களுக்கு ஒலிபெருக்கிகள் மூலம் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.
சென்னை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம் - சென்னை மீனவ கிராம மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை pic.twitter.com/fRbRU3Cg9g
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 3, 2017
இதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட மீனவர்களும் நாளை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள கொட்டிவாக்கம் முதல் கடப்பாக்கம் வரை உள்ள 87.2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரை சார் மீனவர்களுக்கும் மீன்பிடி படகு உரிமையாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு:
இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின் படி வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத் தாழ்வு நிலையினால்வ் அரும் 4.12.17 முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்தத் தாழ்வுநிலை தீவிரமடையும் போது கடல் சீற்றத்துடன் இருக்கும் என்பதாலும் கடல் காற்று அதிவேகமாக வீசக்கூடும் என்பதாலும் மழை பொழிவு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாலும் மீனவர்கள் யாரும் திங்கள்கிழமை முதல் அடுத்த நான்கு நாக்டளுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை, காஞ்சிபுர, திருவள்ளூரில் மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications