சென்னையை மூடிய 'வெம்பா' பனிப்பொழிவு... மூடு பனியால் உறக்கம் கலையாத காலை

சென்னையை மூடு பனி மூடியதால் காலை 9 மணிவரைக்கும் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. புறநகரில் மூடுபனி சூழ்ந்ததால் உறக்கம் கலையவே தமாதமானது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னையை மூடிய வெம்பா பனிப்பொழிவு...வீடியோ

    சென்னை: மூடுபனியால் மூடிய காலை நேரம் சென்னையை நீலகிரியாக மாற்றி விட்டது. கொட்டிய வெம்பாவினால் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே வாகனங்கள் சென்றன.

    சென்னை: சென்னையில் வடகிழக்குப் பருவமழைக்காலம் முடிந்து விட்டதன் அறிகுறியாக பனிக்காலம் தொடங்கிவிட்டது. வெம்பா கொட்டினால் இனி மழை பெய்யாதோ என்று பேசத் தொடங்கிவிட்டனர் சென்னைவாசிகள்.

    அதிகாலையில் ஜில்லென்ற கிளைமேட் சென்னையை சூழ்ந்துகொண்டது. சூரியன் ஒளிந்து கொள்ள மூடுபனி கண்களுக்கு புகை மூட்டமாக தென்பட்டது. போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கியதால் பலரும்
    பலரும் கண் விழிக்க காலதாமதமானது.

    காலை 9 மணிவரை புறநகரை சூழ்ந்த பனிமூட்டம் வாகன ஓட்டிகளை கடும் சிரத்திற்கு ஆளாக்கியது. கடந்த சில வாரங்கள் வரை சென்னையை மழை புரட்டி போட்ட நிலையில் இப்போது மூடு பனி சென்னையை மூடி மக்களின் மூடினை மாற்றி வருகிறது.

    சென்னையில் கொட்டிய மழை

    சென்னையில் கொட்டிய மழை

    சென்னையில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் இறுதியில் தொடங்கியது. நவம்பர் மாதத்தில் மழை கொட்டித்தீர்த்தது. புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. ஏரிகளில் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தன. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது.

    தென் மாவட்டங்களில் கனமழை

    தென் மாவட்டங்களில் கனமழை

    ஓகி புயல் சூறையாடியதால் தென் மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. அணைகள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

    பருவமழையின் அளவு

    பருவமழையின் அளவு

    அக்டோபர் முதல் டிசம்பர் வரை பருவமழை சராசரியாக 400 மில்லி மீட்டர் பெய்திருக்க வேண்டும். ஆனால் 393 மில்லி மீட்டர் அளவிற்கே மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் அதிக அளவாக மழை பதிவாகியுள்ளது. இந்த கால கட்டத்தில் 791 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருக்க வேண்டும். ஆனால் 965 மிமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.

    அதிக அளவு மழை

    அதிக அளவு மழை

    சென்னை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டிணம், திருவள்ளூர், திருவண்ணாமலையில் சராசரியை விட அதிகமாகவே மழை பெய்துள்ளது. திருச்சி, மதுரை, ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது.

    பனியால் சூழ்ந்த சென்னை

    பனியால் சூழ்ந்த சென்னை

    வடகிழக்குப்பருவமழை இன்னும் குறையவில்லை. அதற்கும் வெம்பா கொட்டி வருகிறது. மூடுபனியால்
    சென்னை மாநகரம் ஊட்டி கொடைக்கானல் போல மாறிக் காணப்படுகிறது. சூரியனை 8 மணிக்கு மேல்தான் பார்க்க முடிகிறது. இரவில் கடும் குளிராக காணப்படுகிறது.

    சாலைகளை மூடி பனி

    சாலைகளை மூடி பனி

    சென்னை வளசரவாக்கம், போரூர், ராமாபுரம் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம் அருகே பொத்தேரி, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பனிமூட்டம் நிலவியது.
    பனி மூட்டம் காரணமாக ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

    கிராமங்களில் வெம்பா

    கிராமங்களில் வெம்பா

    வெம்பா பெய்தால் சம்பா விளையும் என்று ஒரு பழிமொழி உண்டு. இந்த வெம்பா பனியிலேயே நெற்கதிர்கள் நன்றாக செழித்து தை மாதம் அறுவடைக்கு தயாராகி விடும் என்பார்கள். அதுபோல பனிக்கு வீட்டு தோட்டங்களில் போட்டுள்ள காய்கறிகள் காய்த்து தொங்கும் என்பதால் கிராமங்களில் வெம்பாவை வரவேற்பார்கள். சென்னையில் வெம்பா பனி விமானத்தை தாமதமாக்கிவிடும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+