சென்னை பள்ளி மாணவியை 4 ஆண்டுகளாக ஒரே லாட்ஜில் பலாத்காரம் செய்த நண்பர்கள்! உரிமையாளர் சிக்குகிறார்?
Recommended Video

சென்னை: பள்ளி மாணவியை, சென்னையிலுள்ள ஒரே லாட்ஜில் வைத்துதான் 2 நண்பர்களும் 4 வருடங்களாக பலாத்காரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் அந்த லாட்ஜ் உரிமையாளரிடம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சென்னை வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை, சவுகார்பேட்டை கிருஷ்ணமுதலி தெருவை சேர்ந்த மோனி மற்றும் வியாசர்பாடி பாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ரவீந்திரன் ஷர்மா ஆகிய இரண்டு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இப்படி உல்லாசமாக இருந்த நிகழ்வை வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

9ம் வகுப்பிலேயே காதல்
இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் ரவீந்திரன் கைது செய்யப்பட்ட நிலையில் மோனி தலைமறைவாகிவிட்டார். முதலில் மோனிதான் பள்ளி மாணவிக்கு அவர் 9ம் வகுப்பு படிக்கும்போதே பழக்கமாகியுள்ளார். காதல் வலை வீசியுள்ளார் மோனி.

முதலில் பீச், பிறகு லாட்ஜ்
முதலில் மாணவி மறுத்துள்ளார். ஆனால் சினிமாவில் காட்டுவதை போல அந்த சிறுமியை பின்தொடர்ந்து லவ் செய்வதாக தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமியும், சினிமா ஹீரோயின்களை போல காதலை ஒப்புக்கொண்டுள்ளார். முதலில் பீச், தியேட்டர் என சுற்றிய இருவரும், பிறகு லாட்ஜுக்கு போயுள்ளனர். முதலில் சாதாரணமாக உல்லாசம் அனுபவித்த மோனி, சில நாட்கள் கழித்து உல்லாசத்தை வீடியோ எடுத்து ரசித்துள்ளார்.

உல்லாசத்திற்கு பிறகு காதல்
இதன்பிறகு நண்பன் ரவீந்திரிடம் அதை காட்டி ரசிக்க, அவருக்கோ அந்த மாணவியை தானும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. பிறகு இருவரும் சேர்ந்து வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி ஒரே நேரத்தில் அந்த மாணவியை உல்லாசம் அனுபவித்துள்ளனர். இதன்பிறகு ரவீந்தருடன் அந்த பெண்ணுக்கு காதல் மலர்ந்ததாம். இதனிடையே 3 முறை கருவை கலைத்துள்ளனர். இந்த கருக்கள் யார் மூலம் உருவானவை என்ற ஆய்வெல்லாம் இங்கு யாரும் செய்யவில்லை. மாத்திரைகள் மூலம் கருக்கள் லகுவாக கலைக்கப்பட்டுள்ளன.

2வது திருமணத்திற்கு ரெடி
ஆனால் ரவீந்தர் சமீபத்தில் வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளாார். இதையடுத்து தனது வீட்டில் தனது காதல் அரங்கேற்றத்தை அந்த சிறுமி கூறி அழுதாராம். உடனடியாக வீராவேசமடைந்த அந்த சிறுமியின் தந்தை, ரவீந்தர் வீட்டுக்கு போய் எனது மகளை திருமணம் செய்தாக வேண்டும் என கூறியுள்ளார். ரவீந்தரின் தந்தையோ, வேண்டுமானால் 2வதாக உங்கள் மகளை ரவீந்தர் கல்யாணம் செய்து வைத்துக்கொள்வார் என கூறியுள்ளார். இதனால் கடும் கோபமடைந்த சிறுமியின் தந்தை வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்தே புதுமாப்பிள்ளை ரவீந்தர் மீது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

ஒரே லாட்ஜில் கும்மாளம்
மாணவியை கடந்த 4 ஆண்டுகளாக ஒரே லாட்ஜிக்கு தான் அழைத்து வந்து மோனி, ரவீந்தர் சர்மா உல்லாசமாக இருந்துள்ளனர். எனவே இது லாட்ஜ் உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஒரே மாணவி வேறு வேறு நபர்களுடன் அடிக்கடி லாட்ஜுக்கு வந்தும் அதை தடுக்கவில்லை. மாறாக, பணத்தை வாங்கிக்கொண்டு ஒத்துழைத்துள்ளனர்.

சிக்குகிறார் லாட்ஜ் உரிமையாளர்
எனவே, அனைத்து குற்றத்திற்கும் உடந்தையாக இருந்த லாட்ஜ் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டது சிறுமி என்பதால் லாட்ஜ் உரிமையாளர் மீதும் வழக்கு பாயும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications