சென்னைவாசிகளுக்கு ஒரு நற்செய்தி… மேலும் 200 அம்மா உணவகங்கள் திறக்கப்படுகிறது!
சென்னை: சென்னையில் மேலும் 200 அம்மா உணவகங்கள் திறக்கப்பட உள்ளதாம்.
ஏழை மக்கள் குறைந்த விலையில் வயிறு நிறைய சாப்பிட சென்னை மற்றும் அனைத்து மாநகராட்சிகளில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. சென்னையில் வார்டுக்கு ஒரு உணவகம் வீதம் 200 வார்டுகளில் 200 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர சென்னையில் உள்ள 3 அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள் உள்ளன.

இந்நிலையில் சென்னை உள்ள 200 வார்டுகளில் வார்டுக்கு ஒன்று வீதம் மேலும் 200 அம்மா உணவகங்கள் திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்து அதற்கான வேலையிலும் இறங்கியது. இந்த கூடுதல் உணவகங்கள் இன்னும் 2 மாதங்களில் திறக்கப்படுமாம்.
இது தவிர கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகள், ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபா பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஆகியவற்றிலும் அம்மா உணவகம் அமைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
முதல்கட்டமாக சென்னையில் அமைக்கப்பட்ட 200 அம்மா உணவகங்கள் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்த கட்டிடங்களில் அமைக்கப்பட்டன. ஆனால் இம்முறை 40 உணவகங்கள் மட்டுமே ஏற்கனவே கட்டப்பட்ட இடத்தில் அமைக்கப்படுகிறது. மீதமுள்ளவை மாநகராட்சி இடத்தில் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமானப்பணி இன்னும் 45 நாட்களில் முடியும். குடிசைப் பகுதிகளுக்கு அருகே அம்மா உணவகங்களை அமைக்க முயற்சித்து வருகிறோம். புதிய உணவகங்கள் இன்னும் 2 மாதங்களில் திறக்கப்படும் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications