சென்னை மக்களுக்கோர் நற்செய்தி... வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் மழை பெய்யுமாம்!
சென்னை: சென்னையில் வருகிற வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் மழை பெய்யலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. பருவ மாற்றத்தால் இந்த இரண்டு நாள் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்குப் பருவ மழை தொடங்கி விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. கேரளாவை மழை வெளுத்து வாங்கி வருவதைப் போல அதையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் செம மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்த நிலையில் பருவ நிலை மாற்றம் காரணமாக சென்னையில் வருகிற வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களும் வானம் மேகமூட்டமாக காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
புதன்கிழமை 77 டிகிரி முதல் 87 டிகிரி வரையும், வியாழக்கிழமை 75 டிகிரி வரையும் வெயில் பதிவாகும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மைய அதிகாரி மேலும் கூறுகையில், ஜூன் மாதத்தில் வழக்கமாக சென்னையில் 18 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு அது 43 மில்லிமீட்டர் கூடுதலாக பெய்துள்ளது. அதாவது 61 மிமீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கடந்த 2010ம் ஆண்டு இதே காலகட்டத்தில் சென்னையில் 136 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்திருந்தது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications