சென்னை ஹைகோர்ட்டிற்கு 6 புதிய நீதிபதிகள் நியமனம்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 6 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனுமதி அளித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்க 60ல் இருந்து 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் 34 நீதிபதிகள் தான் உள்ளனர். அனுமதிக்கப்பட்ட இடங்களில் 41 காலியாக உள்ளன.

நீதிபதிகள் பற்றாக்குறையால் பல வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. இதையடுத்து காலி பணியிடங்களை நிரப்பத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முதல்கட்டமாக 6 வழக்கறிஞர்கள், 3 மாவட்ட நீதிபதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரைத்தது.
பரிந்துரைக்கப்பட்ட 9 பேரில் 6 பேரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றம், பிரதமர் அலுவலகம் மற்றும் சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து 6 புதிய நீதிபதிளை நியமிப்பதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் அளித்துள்ளார்.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான வி.பாரதிதாசன், எஸ்.எஸ்.சுந்தர், எம்.வி.முரளிதரன், டி.கிருஷ்ணகுமார் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பொன்.கலையரசன், சென்னை சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதியாக இருந்து கடந்தாண்டு ஓய்வுபெற்ற பி.கோகுல்தாஸ் ஆகியோர் தான் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் ஆவர்.
இந்த 6 பேரும் தங்களின் 62வது வயது வரை நீதிபதி பதவியில் இருப்பார்கள். கோகுல்தாஸ் மட்டும் தனது 60வது வயதில் உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications