நித்தியானந்தா சீடர் நரேந்திரனை கைது செய்ய ஹைகோர்ட் உத்தரவு
நித்தியானந்தாவின் சீடர் நரேந்திரனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

சென்னை: மதுரை ஆதினமாக தன்னை அறிவித்து கொண்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத நித்தியானந்தாவுக்கு வாட்ஸ் ஆப் மூலம் கோர்ட் நிகழ்வுகளை அனுப்பிய சீடர் நரேந்திரனை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் 293-ஆவது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டார். பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் நித்தியானந்தாவுக்கு முடி சூட்டப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை எதிர்த்து மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அந்த மனுவிலும் நித்தியானந்தா தன்னை மதுரை ஆதினமாகவே அறிவித்துக் கொண்டார்.
இதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மேலும் 292-ஆவது ஆதினம் உயிரோடு இருக்கும் போது அதுபோல் நீங்கள் செயல்பட முடியாது என்பதால் அந்த பதில் மனுவை திருத்தி தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.
இதில் வாய்தா மேல் வாய்தா வாங்கினார் நித்தியானந்தா. இதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அப்போதும் அவர் பதில் மனுவை திருத்தி தாக்கல் செய்யாமல் இருந்தார்.
இந்த வழக்கானது இன்று நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் மதுரை ஆதினமாக தன்னை அறிவித்ததை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் அது குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்காத நித்தியானந்தாவை கைது செய்ய உத்தரவிடப்படும் என்று நீதிபதி கண்டித்தார்.
இந்த நிகழ்வுகளை கோர்ட்டில் இருந்தவாறே நித்தியானந்தரின் சீடர் நரேந்திரன் வாட்ஸ் ஆப் மூலம் தகவல்களை அனுப்பி கொண்டிருந்தார். அப்போது நீதிபதி மகாதேவனிடம் சிக்கிக் கொண்டார். அவரை கைது செய்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications