கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்! சிபிஐ விசாரணை கோரும் அதிமுக! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை தாக்கல் செய்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில், அதிமுக வழக்கறிஞர்கள் அணி செயலாளர் இன்பதுரை மற்றும் வழக்கறிஞர் டி.செல்வம் ஆகியோர் முறையீடு செய்தனர்.

அப்போது அவர்கள், கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரிப்பது முறையாக இருக்காது என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
கள்ளச்சாராய விற்பனை உள்ளாட்சி அமைப்புக்களின் நிர்வாகிகளுக்கு தெரியாமல் நடக்காது என்பதால், அவர்களின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
தமிழக அரசுத்தரப்பில் வழக்கறிஞர் முனியப்பராஜ், கள்ளச்சாராய விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, விசாரணை துவங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மதுவிலக்கு துறை அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கை தாக்கல் செய்ய அனுமதியளித்த நீதிபதிகள், இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் தெரிவித்தனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்











Click it and Unblock the Notifications