நீதிமன்றங்கள் குறித்த மீம்களுக்கு ஹைகோர்ட் கண்டனம்.. விவரம் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:நீதிமன்றம் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான கேலி சித்திரங்களுக்கு ஹைகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியது. ஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அதேபோல, ஜாக்டோ- ஜியோ போராட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

கடும் கண்டனம்

கடும் கண்டனம்

அப்போது, "எனக்கு எதிராகவும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும். 40 ஆயிரம், 50 ஆயிரம் என ஊதியம் வாங்கிவிட்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். 5 மாணவருக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்தது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அவமானம்" என்றும் தெரிவித்தார்.

அரசு மீதும் தவறு

அரசு மீதும் தவறு

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கூறுகையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானதே, ஆனால் போராடும் வழிமுறை தவறு. ஆசிரியர்கள் ஊதிய உயர்வு விவகாரத்தில் அரசின் தவறும் உள்ளது.

பங்களிப்பை செலுத்தாதது ஏன்?

பங்களிப்பை செலுத்தாதது ஏன்?

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசு தரப்பு பங்களிப்பை செலுத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து வரும் திங்கள்கிழமை பதிலளிக்க தமிவக அரசுக்கு உத்தரவிட்டார்.

தமிழக அரசு விளக்கம்

தமிழக அரசு விளக்கம்

முன்னதாக, 30 ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.29,000 முதல் 91,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்தது.

மீம்ஸ் தவறு

மீம்ஸ் தவறு

இதனிடையே, நீதிமன்றம் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான கேலி சித்திரங்களுக்கு நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் வெளியான மீம்ஸ்கள் குறித்த விவரத்தை கோர்ட்டில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவுபிறப்பித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Chennai High Court condemned the memes on the court in social media, ask the gvt to submit memes.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற