பேசப்டாது.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விதித்த தடையை நீட்டித்தது ஹைகோர்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பால் நிறுவனங்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் பால் நிறுவனங்களை கட்டம் கட்டி குற்றம்சாட்டி வந்தார். ஆவின் பால் மட்டும் தான் ஆரோக்கியமானது என்ற அவர் டோட்லா, ஹட்சன், விஜய் உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் விநியோகிக்கும் பாலில் கலப்படம் செய்வதாக தெரிவித்தார்.

Chennai High Court has extended the ban imposed on Minister Rajendra Balaji to talk about dairy companies

இதனால் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பதாகவும் கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்த தனியார் பால் நிறுவனங்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேச அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தடைவிதித்தது. இந்நிலையில் இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரித்த சென்னை ஹைகோர்ட் தனியார் பால் நிறுவனங்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச விதிக்கப்பட்ட தடையை நீட்டிதுத்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், தனியார் பால் நிறுவனங்கள் தங்களுடைய பால் மாதிரிகளை சோதனைக்கூடங்களில் ஆய்வுக்குட்படுத்தி, அதன் முடிவுகளை மூன்று மாதங்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Chennai High Court has extended the ban imposed on Minister Rajendra Balaji to talk about dairy companies. In addition, private dairy companies will examine their milk samples in laboratories and submit the results to the High Court within three monthsThe High Court has ordered.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற