ஆசியாவிலேயே ரொம்பக் கேவலமான ஏர்போர்ட்.. நம்ம சென்னைதாங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கண்ணாடி விழுவதில் தொடர்ந்து சாதனை படைத்து சதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் சென்னை விமான நிலையம், தற்போது ஆசியாவின் மிக மோசமான விமான நிலையங்களின் பட்டியலிலும் இடம் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்கள் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதி திறக்கப்பட்டது.

அழகுக்காக விலை உயர்ந்த கண்ணாடி கதவுகள், கண்ணாடி சுவர்கள், 2 கிரானைட் கற்கள் பதித்த பிரம்மாண்ட சுவர், தடுப்புகள் மற்றும் மேற்கூரைகள் அமைக்கப்பட்டன.

3வது மாதத்திலிருந்து

3வது மாதத்திலிருந்து

விமான நிலையம் திறக்கப்பட்ட 3-வது மாதத்தில் இருந்து தன்னுடைய கவுண்டவுனை ஆரம்பித்தது. அதான் கண்ணாடி கதவுகள், கண்ணாடி சுவர்கள் மற்றும் கிரானைட் கற்கள் உடைந்து விழத் தொடங்கின. தற்போது கண்ணாடி நொறுங்கி விழுவதில் தொடர்ந்து சாதனை படைத்து 50 ஐ தாண்டியது.

மோசமான விமான நிலையங்கள்

மோசமான விமான நிலையங்கள்

இந்நிலையில், 'தி கைட் டூ ஸ்லிப் இன் ஏர்போர்ட்ஸ் ' என்ற சுற்றுலா இணையதளம், உலகின் மிக மோசமான விமான நிலையங்கள் குறித்து அண்மையில் ஆய்வு நடத்தியது.

ஆசியாவிலேயே மோசம்

ஆசியாவிலேயே மோசம்

இதில், 26 ஆயிரத்து 297 விமானப் பயணிகளிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் ஒரு பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், ஆசியாவில் மிக மோசமான விமான நிலையங்கள் பட்டியலில் சென்னை விமான நிலையத்துக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது.

முதல் பத்து இடங்களில் சென்னை

முதல் பத்து இடங்களில் சென்னை

இந்தியாவில் இருந்து இந்த பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இடம் பெற்றுள்ள, ஒரே விமான நிலையம் சென்னைதான் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

திரிபுவன் முதலிடத்தில்

திரிபுவன் முதலிடத்தில்

இந்த பட்டியலில் நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது. தாஷ்கண்ட் விமானநிலையம் 2வது இடத்தையும், காபூல் நகர விமான நிலையம் 3வது இடத்தையும் பெற்றுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+