சென்னை- குவைத் விமானம் எஞ்சின் பிரச்சினையால் ரத்து; 245 பயணிகள் அவதி!
சென்னை: சென்னை- குவைத் விமானம் இன்று எந்திரக் கோளாறால் சென்னை வந்தடையாத காரணத்தினால் அப்பயணம் ரத்து செய்யப்பட்டது. அதனால் விமானத்திற்கு காத்திருந்த 245 பயணிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
குவைத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு அதிகாலை 3.30 மணிக்கு விமானம் ஒன்று தினசரி வரும். அந்த விமானம் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு மீண்டும் குவைத் செல்லும்.

ஆனால் இன்று அதிகாலை 3.30 மணிக்கு அந்த விமானம் குவைத்தில் இருந்து சென்னை வரவில்லை. அதிகாலை 5 மணிக்கு அந்த விமானத்தில் புறப்பட்டு செல்வதற்காக 245 பயணிகள் காத்திருந்தனர். விமானம் வராததால் அவர்கள் விமான நிலையத்திலேயே தவித்தனர்.
இதற்கிடையே அந்த விமானம் எந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்துக்காக காத்திருந்த பயணிகள் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இன்று மாலையில் அவர்கள் மாற்று விமானம் மூலம் குவைத் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஏர் இந்தியா, இண்டிகோ விமான நிறுவனங்கள் எடுத்த முடிவு.. பெங்களூர், மும்பை பயணிகளுக்கு அதிர்ச்சி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications