சட்டக்கல்லூரியை இடமாற்றக் கூடாது... மாணவர்கள் தற்கொலை மிரட்டலால் சென்னையில் பரபரப்பு!
சென்னை பாரிமுனையில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளத
Recommended Video

சென்னை : சென்னை பாரிமுனையில் உயர்நீதிமன்றம் அருகே செயல்பட்டு வரும் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பாரிமுனையில் உள்ள நுற்றாண்டுகள் பழமை வாய்ந்த அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சுமார் 2500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கிருக்கும் கல்லூரி போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் காரணத்ததால் திருவள்ளூர் மாவட்டம் புதுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் பட்டறைபெரும்பாக்கம் ஆகிய இடங்களில் மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

அந்த பணிகள் முடிந்து தற்போது இந்த ஆண்டு முதல் சட்டக்கல்லூரியை தொடங்க இருந்தனர். சட்டக்கல்லூரி மாற்றப்படுவதை கண்டித்து சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் பலமுறை ஆர்ப்பாட்டம், மறியல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக சட்டக்கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று தூக்கு போட்டுக் கொண்டும், சட்டத்துறை அமைச்சரின் உருவபொம்மையை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று மாலையில் சட்டக்கல்லூரிக்கு அருகில் இருக்கும் பழைய கட்டிடத்தின் மாடியில் ஏறி 10 சட்டக்கல்லூரி மாணவர்கள் 10 பேர் உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டத்துறை அமைச்சரோ செயலாளரோ நேரில் வந்து கல்லூரி இடமாற்றம் செய்யப்படும் என்று எழுத்து மூலமாக உத்திரவாதம் அளிக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று மாணவர்கள் கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications