சென்னை-மதுரை துரந்தோ எக்ஸ்பிரஸ் வரும் ஜனவரி முதல் சேலத்திலும் நிற்கும் - தெற்கு ரயில்வே
சென்னை: சென்னையிலிருந்து மதுரை வரை செல்லும் துரந்தோ வாரம் இருமுறை ரயிலானது ஜனவரி மாதம் முதல் சேலத்திலும் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை சென்ட்ரலில் இருந்து திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் மதுரை நோக்கி சென்னை சென்ட்ரல்-மதுரை துரந்தோ வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் வருகிற ஜனவரி (2016) மாதம் 4 ஆம் தேதியில் இருந்து சேலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். சென்னையில் இருந்து இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் இந்த ரயில் அதிகாலை 2.55 மணிக்கு சேலத்துக்கு வந்து, அதிகாலை 3.05 மணிக்கு மதுரை நோக்கி புறப்படும்.
அதேபோல மறுமார்க்கமாக மதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் சென்னை நோக்கி இயக்கப்படும் மதுரை-சென்னை சென்ட்ரல் துரந்தோ வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் (22206) ரயில் ஜனவரி 5 ஆம் தேதியில் இருந்து சேலம் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது.
மதுரையில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அதிகாலை 2.20 மணிக்கு சேலத்துக்கு வந்து, அங்கிருந்து 2.30 மணிக்கு சென்னை நோக்கி புறப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications