சென்னை, தென்மாவட்டத்தில் 12 மணி வரை கனமழை வெளுக்கும்... வானிலை மையம்!
சென்னையில் பகல் 11 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் பகல் 11 மணி வரையிலும், தென்மாவட்டங்களில் பகல் 12 மணி வரையிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது, இது புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் விட்டு விட்டு கனமழையும் பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை விட்டு விட்டு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை வெளுத்து வாங்குகிறது. எனினும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

குமரியில் பலத்த காற்று
கனமழை எதிரொலியால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கனமழையுடன் பலத்த காற்றும் வீசுவதால் 2 செல்போன் டவர்கள் உள்பட் சாலையோர மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன.

இரவு முதல் பலத்த காற்று, மழை
நேற்று இரவு முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சராசரியாக 34 மிமீ மழை பதிவாகி இருக்கலாம் என்று தெரிகிறது. சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை நிலவரம்
இதனிடையே சென்னையில் பகல் 11 மணி வரையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணமாலை, வேலூரிலும் காலை 11 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் 12 மணி வரை
தென்மாவட்டங்களில் 12 மணி வரை மிககனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலியில்
ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டத்திலும் பகல் 12 மணி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications