சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலிருந்து தப்பிய 4 சிறுவர்கள் கைது.. திரையங்கில் சுற்றி வளைத்தது போலீஸ்
சென்னை : கெல்லீஸில் உள்ள அரசு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து தப்பியோடிய சிறுவர்களில் மேலும் 4 பேரை போலீசார் திரையரங்கில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக காவல்துறையினரால் கைது செய்யப்படும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சென்னை புரசைவாக்கம் கெல்லீஸில் உள்ள அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்து வைக்கப்படுகிறார்கள்.

இந்தச் சீர்திருத்தப் பள்ளியில் தரைத் தளத்தில் 23 சிறுவர்களும், முதல் தளத்தில் 20 சிறுவர்களும் வைக்கப்படட்டிருந்தனர். இந்த நிலையில் சீர்திருத்தப்பள்ளியின் வார்டன் விஜயக்குமார் கடந்த 17-ஆம் தேதி பணியில் இருக்கும்போது, அவரைத் தாக்கி 14 சிறுவர்கள் தப்பியோடினர்.
இந்தச் சம்பவம் குறித்து தலைமைச் செயலக காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய சிறுவர்களை தேடி வந்தனர். இதில் 5 சிறுவர்களை போலீஸார் உடனடியாக கைது செய்தனர்.
எஞ்சிய சிறுவர்களைத் தேடி வந்தனர். இதற்கிடையே அசோக்நகரில் உள்ள ஒரு திரையரங்கில் 4 சிறுவர்கள் சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் போலீசார், அங்கு சென்று அந்த 4 சிறுவர்களை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் 4 பேரும் கெல்லீஸ் சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பியோடியவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள 5 சிறுவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications