காதலியை கழற்றி விட்ட காதலன்.. பிடித்து வந்து.. ஸ்டேஷனில் வைத்து கட்றா தாலியை.. போலீஸ் அதிரடி!
காதலியை ஏமாற்ற முயன்ற இளைஞனுக்கு திடீர் திருமணம் நடந்தது
சென்னை: "பொண்ணை ஏமாத்தி அனுபவிச்சிட்டு.. எங்கே ஓட பார்க்கிறே" என்று வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற காதலனை இழுத்து பிடித்து வந்து கல்யாணம் செய்து வைத்துள்ளனர் போலீசார்!!
சென்னை அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் வனிதா.. அகத்தீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன்... 4 வருட காதலர்கள் இவர்கள்.

திடீரென இருவருக்கும் தகராறு வந்துவிட்டது.. பிரச்சனை செய்தது வெங்கடேஷ்தான்.. அதனால் கவிதாவை விட்டு விலகி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றமடைந்த வனிதா வெங்கடேசன் மீது சங்கர் நகர் போலீசில் புகார் தந்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.. அப்போதுதான், வெங்கடேஷ் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.. உடனடியாக வெங்கடேஷை மடக்கி பிடித்து விசாரித்தனர்.. அப்போது வெங்கடேஷ் சொல்லும்போது, :"கவிதா அழகாக இல்லை.. எப்படி கல்யாணம் செய்துக்கிறது.. அதனாலதான் அவளை விட்டு பிரிந்து போய்ட்டேன்" என்றார்.
ஆனால் உண்மையிலேயே பலமுறை இப்படித்தான் வெங்கடேஷ் வெளிநாட்டுக்கு தப்பி ஓட முயற்சி செய்துள்ளார்.. அதனால் 3 முறை கவிதா தற்கொலைக்கும் முயற்சி செய்திருக்கிறார்... இதனால், இப்போது விட்டால் வெங்கடேசன் திரும்பவும் வெளிநாட்டுக்கு சென்றுவிடுவார் என்பதால், போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேசினர்.
ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கி இருவருக்கும் ஸ்டேஷனிலேயே கல்யாணம் செய்து வைத்துவிட முடிவு செய்தனர்... காதலர்களுக்கு மாலை மாற்றி தாலி கட்டி கல்யாணம் நடந்தது.. பிறகு இருவரிடமும் புகாரை திரும்ப பெறுமாறு எழுதி வாங்கிக்கொண்டு. புதுமண தம்பதிகளை போலீசார் வாழ்த்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
-
சென்னை மின்தடைக்கு முற்றுப்புள்ளி? கடலூர், நகையில் இருந்து பறந்து வந்த ஸ்பெஷல் டீம்.. குட்நியூஸ் -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications