மதனை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் மனு!
வேந்தர் மூவிஸ் மதனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை: பணமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து பிடிபட்ட வேந்தர் மூவிஸ் மதனை 10 நாள் போலீஸ் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக 113 மாணவர்களிடம் ரூ80 கோடி மோசடி செய்தார் மதன் என்பது குற்றச்சாட்டு. ஆனால் இந்த பணத்தை தாம் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவர் பச்சமுத்துவிடம் ஒப்படைத்துவிட்டதாக கூறி தற்கொலை செய்யப் போவதாக எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார் மதன்.

ஆனால் கடந்த 6 மாதங்களு9க்கும் மேலாக உல்லாசமாக தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார் மதன். திருப்பூரில் பெண் ஒருவர் வீட்டின் ரகசிய அறையில் பதுங்கியிருந்த போது மதன் போலீசில் பிடிபட்டார்.
திருப்பூரில் கைது செய்யப்பட்ட மதன் நேற்று சென்னை கொண்டுவரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். டிசம்பர் 5-ந் தேதி வரை மதனை சிறையில் அடைக்க உத்தரவிட்டப்பட்டது.
இதனிடையே சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மதனை 10 நாட்கள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மே மாதம் முதல் தலைமறைவாக இருந்த வேந்தர் மூவிஸ் மதன் திருப்பூரில் ரகசிய அறையில் பதுங்கி இருந்த போது சிக்கினார். இதனிடையே மதன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications