சென்னையில் பல இடங்களில் பலத்த மழை.. புறநகர்களில் வெளுத்து வாங்கியது!
சென்னை: சென்னையின் பல பகுதிகளிலும், புறநகர்களிலும் கன மழை பெய்து மக்கள் மனங்களை குளிர்வித்தது. பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
சென்னையில் கடந்த சில தினங்களாகதொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இன்றும் மாலைக்கு மேல் நகரின் பல பகுதிகளிலும் மழை பெய்ய ஆரம்பித்தது.

திருவல்லிக்கேணி, கிண்டி, அரும்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை ஆகிய நகர்ப் பகுதிகளிலும், கிண்டி, பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது.
குரோம்பேட்டை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. போகப் போக காற்று நின்று மழை மட்டும் பலமாக பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்று இரவு சென்னை, புதுச்சேரி, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மோன் கணித்துள்ளது.
அதேசமயம், கடந்த 2 நாட்களில் ஒட்டுமொத்த தமிழகத்தில் மழையின் அளவு குறைந்துள்ளதாகவும் வெதர்மேன் கூறியுள்ளது
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications