சென்னை மாதவரத்தில் கைவரிசை காட்டிய 7 பேர் கும்பல் - ஊட்டியில் சுற்றி வளைத்து கைது
சென்னை மாதவரத்தில் பணம் பறித்த 7 பேர் கொண்ட கும்பலை போலீஸார் இன்று கைது செய்தனர்
சென்னை: சென்னை மாதவரம் அருகே லாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் பறித்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாதவரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயுள் டேங்க் உரிமையாளர்களை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து சென்றது. இதுதொடர்பாக சென்னை மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை தேடி வந்தனர்.

தனிப்படை போலீசாரின் விசாரணையில் கொள்ளை கும்பல் ஊட்டியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊட்டி சென்ற தனிப்படை போலீசார், விடுதியில் தங்கியிருந்த அந்த கும்பலை சுற்றிவளைத்து கைது செய்தது.
விசாரணையில், அவர்கள் கொடுங்கையூரை சேர்ந்த இம்ரான், செந்தில்குமார், மீஞ்சூரை சேர்ந்த சையத் இப்ராஹிம், மணலியை சேர்ந்த ரகு, மணலிபுதுநகரை சேர்ந்த கரிமுல்லா, மதுரையை சேர்ந்த ரகு, சிவகங்கையை சேர்ந்த கமல்ராஜன் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கி, கத்தி, ரூ.5 லட்சம் ரொக்கம், செல்போன், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications