'கலெக்ஷனை' அள்ளும் 'அம்மா' பஸ்கள்... சென்னை ஸ்மால் பஸ்களின் வசூல் சாதனை!!
சென்னை: சென்னையில் அதிமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மால் பஸ்கள் எனப்படும் சிற்றுந்துகளுக்கு கிடைத்துள்ள வரவேற்பு பிரமாண்டமானதாக இருக்கிறது. அறிமுகமாகி ஒரு வருடத்திற்குள்ளாகவே அதன் மூலம் கிடைத்துள்ள வசூல் பிரமாதமாக உள்ளதாம்.
முதலில் 50 பஸ்களை முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். பின்னர் அதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மேலும் 50 பஸ்கள் என மொத்தம் தற்போது 100 பஸ்கள் சென்னை நகரிலும், புறநகர்களிலும் வலம் வந்து கொண்டுள்ளன.
அம்மா பஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த பச்சை நிற ஸ்மால் பஸ்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

2013ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி
சென்னையில் பெரிய பஸ்கள் செல்ல முடியாத இடங்களுக்கு பொது மக்களின் வசதிக்காக ஸ்மால் பஸ்களை முதல்வர் ஜெயலலிதா கடந்த 23.10.2013 அன்று அறிமுகப்படுத்தினார்.

முதலில் 50 பஸ்கள்
முதல் கட்டமாக 50 சிறிய பஸ்கள் சென்னையில் விடப்பட்டன. குறிப்பாக பஸ் நிறுத்தங்களில் இருந்து நீண்ட தூரம் நடக்க வேண்டிய தெருக்களுக்கு இந்த சிறிய பஸ் இயக்கப்பட்டதால் பொதுமக்களிடையே அமோக வரவேற்பு ஏற்பட்டது.

கை காட்டினால் நிற்கும் ஸ்மால் பஸ்
ஆட்டோக்கள் செல்லும் பாதையில் கூட இப்பஸ்கள் இயக்கப்பட்டதுடன் பொது மக்கள் எங்கு கை காட்டினாலும் அங்கெல்லாம் இந்த சிறிய பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றிச் சென்றது.

ஆட்டோக்காரர்களுக்கு அடி
இதனால் பொதுமக்கள் ஆட்டோக்களுக்கு கொடுக்க வேண்டிய பணம் மிச்சமாகியது. ஆட்டோக்களுக்கு கொட்டி அழுத மக்களுக்கு விமோச்சனம் கிடைத்தது.

மேலும் 50 பஸ்கள்
ஸ்மால் பஸ்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஜெயலலிதா கடந்த 19.2.2014 அன்று மேலும் 50 சிறிய பஸ்களை கொடியசைத்து சென்னையில் தொடங்கிவைத்தார்.

முதல் 50 மூலம் ரூ. 5,47,96,545 வசூல்
முதலில் விடப்பட்ட 50 ஸ்மால் பஸ்கள் மூலம் இதுவரை ரூ. 5 கோடியே 47 லட்சத்து 96 ஆயிரத்து 545 வசூலாகியுள்ளதாம். பயணித்துள்ள பயணிகள் எண்ணிக்கை 79 லட்சத்து 78 ஆயிரத்து 14 பேர் ஆவர்.

அடுத்த 50 மூலம்
இதேபோல் 19.2.14 முதல் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மேலும் 50 சிறிய பஸ்கள் மூலம் நேற்றுவரை 30 லட்சத்து 69 ஆயிரத்து 607 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த பயணிகள் மூலம் கிடைத்த டிக்கெட் வசூல் ரூ.2 கோடியே 14 லட்சத்து 37 ஆயிரத்து 141 ஆகும்.

ஆக மொத்தம் ரூ. 7.62 கோடி
ஆக இந்த 100 பஸ்கள் மூலம் அரசுக்கு இதுவரை 7 கோடியே 62 லட்சத்து 23 ஆயிரத்து 686 ரூபாய் வசூலாகியுள்ளதாம்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications