Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டி.எல்.எஃப் வளாகத்தில் பலர் பலியானதாக பரவிய தகவல்: போலீசார் 5 மணி நேரம் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனமழை வெள்ளத்தால் சென்னை டி.எல்.எஃப் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் ஊழியர்கள் பலியானதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும், அது வெறும் வதந்திதான் என்றும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும் வெள்ளம் சூழ்ந்த டி.எல்.எப். வளாகத்தை போலீசார் 5 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டதை அடுத்து வெள்ளநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னையை அடுத்த போரூர் - பூந்தமல்லி சாலையில், 42 ஏக்கர் பரப்பளவில், டி. எல்.எஃப் தகவல் தொழில்நுட்ப வளாகம் உள்ளது. அங்கு, 10 மாடிகள் கொண்ட கட்டிடங்கள் உள்ளன. அங்கு 57 பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. மென்பொறியாளர்கள், நிர்வாக பிரிவு அதிகாரிகள், பாதுகாப்பு காவலாளிகள், துப்புரவு ஊழியர்கள் என, 65 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.

இந்த தொழில்பூங்காவில் தரைதளத்துக்கு கீழே பூமிக்கடியில் 3 தளங்களாக வாகனங்கள் நிறுத்துமிடங்கள் உள்ளன. 23 ஏக்கர் பரப்பளவில், உள்ள இந்த 3 தளங்களில் மின்வினியோக நிலையம், துப்புரவு ஊழியர்கள், பாதுகாவலர்கள் தங்கும் இடம், வாகன நிறுத்தம் ஆகியவை உள்ளன.

கடந்த நவம்பர் 30ம் தேதி முதல் பெய்த கனமழையால் இந்த 3 தளங்களிலும் மழைநீர் புகுந்தது. செம்பரம்பாக்கம் மற்றும் போரூர் ஏரிகளில் இருந்து, மணப்பாக்கம், ராமாபுரம் கால்வாய்கள் வழியாக சீறிப்பாய்ந்த வெள்ள நீரும் மளமளவெ, டி.எல்.எஃப்., வாகன நிறுத்தங்களுக்குள் புகுந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் மின்சாரத்தை துண்டித்தனர். சில மணிநேரங்களில், பூமிக்கடியில் உள்ள மூன்று தளங்களும் வெள்ளத்தில் மூழ்கின. அதையடுத்து, ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அடுத்தடுத்த நாட்களில், அவர்கள் பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டனர். அதே நேரத்தில் பணியாளர்கள் நிறுத்திச் சென்றிருந்த, 600 கார்கள் மற்றும் 300 இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கி விட்டன.

 பணியாளர்களுக்குத் தடை

பணியாளர்களுக்குத் தடை

இதனிடையே மழை நின்ற பின்னர் கடந்த 10ம் தேதி முதல் ஏராளமான ஊழியர்கள் டி.எல். எஃப் வளாகத்திற்கு வரத்தொடங்கினர். ஆனால் வளாகத்தைச் சுற்றி இரண்டடுக்கு பாதுகாப்பு போடப்பட்டதோடு, ஊழியர்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. ஊடகங்களுக்கும் வீடியோ எடுக்க அனுமதி மறுக்கப்பட்டது.

 சமூக வலைத்தள தகவல்கள்

சமூக வலைத்தள தகவல்கள்

இந்த நிலையில், டி.எல்.எஃப். வாகன நிறுத்தும் இடத்தில் புகுந்த வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்து விட்டனர் என்றும் சடலங்களை இரவோடு இரவாக, அந்த நிறுவனம் வெளியேற்றிவிட்டது எனவும், சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஊடகங்களிலும் இதுபற்றி தகவல் பரவியது. செய்தியாளர்களும் டி.எல்.எஃப் வளாகத்தின் முன்பு குவிந்தததால் பரபரப்பு ஏற்பட்டது.

 வெள்ள நீர் வெளியேற்றம்

வெள்ள நீர் வெளியேற்றம்

இதனைத் தொடர்ந்து ஆலந்தூர் மண்டல உதவி ஆணையர் செங்கோட்டையன், பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் மன்சூர்அலி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொண்டார். இறப்பு ஏதும் நடக்கவில்லை எனவும், அது வதந்தி எனவும் நிர்வாகத்தினர் தரப்பில் கூறப்பட்டது. தற்போது, முதல் அடுக்கில் தேங்கி இருந்த வெள்ளம் மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளது. மற்ற இரு அடுக்குகளில் இருந்து, 49 ராட்சத மின் மோட்டார்கள் மூலம், வெள்ளத்தை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

 ஊழியர்கள் பலியாகவில்லை

ஊழியர்கள் பலியாகவில்லை

பரபரப்புக்கு மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.எல்.எஃப். துணை தலைவர் மற்றும் விற்பனை பிரிவு தென்மண்டல தலைவர், இ.டேவிட், மழை வெள்ளம் சூழ்ந்ததும் ஊழியர்களை பத்திரமாக வெளியேற்றி விட்டோம் என்றார். பணியாளர்களின் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்திபின், தகவல் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் சாவியை கொடுத்துவிடுவர். அதனால், உடனடியாக, 360 கார்களை நீரில் மூழ்காமல் காத்துவிட்டோம். பாதுகாப்பு கருதியே பணியாளர்கள் அனுமதிக்கப் படவில்லை. உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது என்பது வெறும் வதந்திதான் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+