ஜல்லிக்கட்டு.. தி.நகரில் பாஜக தலைமை அலுவலகம் முற்றுகை... மாணவர்கள் கைது
ஜல்லிக்கட்டை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தை மாணவர்கள் அமைப்பினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
பொங்கல் நெருங்கிவிட்ட நிலையில், ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு போராட்டங்கள், கோவை, சேலம், சிவகாமி, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, காஞ்சிபுரம் என அனைத்து மாவட்டங்களிலும் தீவிரம் அடைந்துள்ளன.

இந்நிலையில், இன்று மாலை மாணவர்கள் அமைப்பினர் சென்னையில் உள்ள தியாகராயர் நகரில் ஒன்று கூடினார். ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் முட்டுக்கட்டைப் போட்டு வரும் மத்திய பாஜக அரசை கண்டிக்கும் வகையில், தி.நகரில் உள்ள வைத்தியநாதன் தெருவில் உள்ள பாஜக அலுவலகத்தை அவர்கள் முற்றுயிட்டனர். அப்போது, ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கமாறும், மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு மூளும் நிலை உருவானது. இதனையடுத்து, போலீசார் மாணவர்களை கைது செய்துள்ளனர். இதனால் பாஜக அலுவலகம் உள்ள தி.நகரில் பரபரப்பு ஏற்பட்டது.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications