பொய் வழக்கு போடுகிறார்கள்... போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்த மாஜி கொள்ளைக்காரர்
சென்னை: சென்னையை ஒருகாலத்தில் கலக்கிய பிரபலமான கொள்ளைக்காரன் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு ஒன்றினை அளித்துள்ளார். தன் மீது போலீஸார் பொய் வழக்கு போடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சைதாப்பேட்டை மேட்டுத் தெருவில் வசித்து வருபவர் கவுஸ்பாஷா. பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை கலக்கிய கொள்ளையனான இவர் மீது பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் ராயபேட்டையில் நடந்த தொடர் கொள்ளை வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், கவுஸ்பாஷா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். நடக்கவே முடியாத நிலையில் அவர் காணப்பட்டார்.
அவருடன் மகள் ரதி மற்றும் குடும்பத்தினர் வந்திருந்தனர். கவுஸ்பாஷா கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், "கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கண்ட முகவரியில் குடியிருக்கும் என் மீது சின்ன சின்ன திருட்டு வழக்குகள் உள்ளன.
பல வழக்குகளில் விடுதலை பெற்றுள்ளேன். சில வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் எந்த குற்ற வழக்குகளிலும் ஈடுபடாத நான் தற்போது நோய்வாய்பட்டு அவதிப்பட்டு வருகிறேன்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த கொள்ளை சம்பவங்களில் எனது கைரேகை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்த குற்றமும் செய்யாத என் மீது பொய் வழக்கு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications