தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி... சென்னையில் சோகம்!
சென்னை: குடியிருப்புப் பகுதியில் தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்ததில் குழந்தை ஒன்று பலியான சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதியில் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது.

இந்நிலையில், பள்ளிக்கரணையில் குடியிருப்புப் பகுதியில் தேங்கியிருந்த மழை நீரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை அறியாத இரண்டரை வயது வகீஸ் என்ற குழந்தை, வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த போது, தெரியாமல் அந்நீரில் காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் தேங்கிய நீரில் மின்சாரம் பாய்ந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக அப்போதே புகார் அளிக்கப் பட்டதாகவும், அரசு மழையால் சேதமடைந்த சாலைகளை சீர் செய்வதில் மந்தம் காட்டுவதால் தற்போது குழந்தை ஒன்றும் பலியாகி உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications