சென்னையில் மாலை அல்லது இரவில் கனமழை பெய்யலாம்.. எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்!!
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அவ்வப்போது வெப்பசலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது.
குறிப்பாக வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயிலின் உக்கிரம் உள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகம்
சென்னையில் அவ்வப்போது மேக மூட்டம் இருந்தாலும் புழுக்கம் கொஞ்சமும் குறையவில்லை. இதேபோல் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் மேற்கு வங்க கடலில் உருவாகிய மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை பெய்யும்
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருப்புவனத்தில் 8 செ.மீ., கரூரில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

இரவில் கனமழை
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications