For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓடோமாஸ் திருடி சிக்கிக் கொண்ட சென்னை பெண் போலீஸ்... சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவு

சென்னை எழும்பூரில் ஒரு கடையில் சாக்லேட் திருடிய பெண் போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சாக்லேட் திருடி சிக்கிக்கொண்ட பெண் போலீஸ் சஸ்பெண்ட்- வீடியோ

    சென்னை: சென்னை எழும்பூரில் ஒரு கடையில் சாக்லேட் திருடிய பெண் போலீஸ் கான்ஸ்டபிளை காவல் ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

    வேப்பேரி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் நந்தினி. இவர் எழும்பூரில் உள்ள நீல்கிரிஸ் கடைக்கு சென்றுள்ளார்.

    Chennai Woman Police who theft chocolates in a shop suspended

    அங்கு போன் பேசி கொண்டே நீண்ட நேரமாக சுற்றி வந்த நந்தினி இறுதியாக ஒரு பொருளை மட்டும் பில் போட கொடுத்துள்ளார். அப்போது அந்த பில் போடும் ஊழியர் உங்கள் பாக்கெட்டுகளில் வைத்துள்ள பொருட்களையும் எடுத்து தாருங்கள். பில் போட்டவுடன் எடுத்துச் செல்லுங்கள் என்றார்.

    அதற்கு நந்தினி அப்படியெல்லாம் நான் எதையும் எடுக்கவில்லை என்றார். அந்த ஊழியரோ நீங்கள் பொருட்களை எடுத்து பாக்கெட்டுகளில் வைத்ததை சிசிடிவி கேமராக்கள் மூலம் பார்த்துவிட்டோம் என்றார்.

    அப்படியும் நந்தினி பிடிவாதம் பிடித்தார். இதையடுத்து பெண் ஊழியர்களை கொண்டு நந்தினியை சோதனையிட்டனர். அதில் சாக்லேட்டுகள், ஓடோமாஸ் ஆகியவற்றை அவர் திருடி வைத்திருந்தார். இதையடுத்து இனி திருட மாட்டேன் என்று கடை ஊழியர்கள் நந்தினியிடம் எழுதி வாங்கிக் கொண்டனர்.

    தகவலறிந்த நந்தினியின் கணவர் அடியாட்களுடன் வந்து கடையில் இருந்த ஊழியர்களை தாக்கினார். இதில் இருவர் படுகாயமடைந்தனர். மேலும் பெண் காவலர் திருடிய வீடியோவும், அவரது கணவர் ஊழியர்களை தாக்கிய வீடியோவும் வைரலானது.

    இதையடுத்து நந்தினியை காவல் ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். திருடர்களை பிடிக்கும் போலீஸே இப்படி திருடியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    English summary
    Chennai Vepery police station lady constable suspended for looting chocolates and Odomos in a shop.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X