காதல் விவகாரம்.. செல்போன் டவரில் ஏறி இளம்பெண் தற்கொலை மிரட்டல்..சென்னை அருகே பரபரப்பு
சென்னை திருவேற்காட்டில் இளம்பெண் ஒருவர் உயர் மின் அழுத்தக் கோபுரத்தில் தற்கொலைக்கு விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை: திருவேற்காட்டில் காதலித்து ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவேற்காடு தம்புசாமி நகரைச் சேர்ந்தவர் பிரியா. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் இவர் அதே பகுதியை சேர்ந்த சபரி என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சபரிக்கு வீட்டில் பெண் பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த மாதம் சபரிக்கும் வேறொரு பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து பிரியா காதலன் தன்னை ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபரி மீது பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இதனை தொடர்ந்து காவல் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து பேசி பிரியாவை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று திடீரென பிரியா வீட்டின் அருகே உள்ள செல்போன் டவரின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தன்னை ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்த காவல் துறையினர், சுமார் ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தி அப்பெண்ணை கீழே இறக்கினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications