கப்பலைப் பார்க்கும் ஆசையில் ரயிலின் மீது ஏறிய வாலிபர்... மின்கம்பியைப் பிடித்ததால் படுகாயம்
சென்னை: சென்னையில், துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கப்பலைக் காணும் ஆசையில் ரயிலின் மேற்கூரையில் ஏறிய வாலிபர் மின்கம்பியைப் பிடித்ததால் மின்சாரம் தாக்கிக் காயமடைந்தார்.
கடந்த சனிக்கிழமையன்று இரவு 11மணியளவில் சென்னைக் கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அதில் அமர்ந்திருந்த வாலிபர் ஒருவர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ரயிலின் மேற்கூரையில் ஏறினார். அங்கு நின்றபடி கடலையும், துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கப்பலையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென அவரது கால் சறுக்கவே பிடிமானத்திற்காக மேலே சென்ற மின்சாரக் கம்பியைப் பிடித்து விட்டார். இதில் பலத்த சத்தத்துடன் தூக்கி வீசப்பட்டவர் கீழே பிளாட்பாரத்தில் வந்து விழுந்தார்.
உடனடியாக அந்த வாலிபரை மீட்ட ரயில்வே ஊழியர்கள், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், காயமடைந்த வாலிபரின் பெயர் கார்த்திக் (23) என்றும், அவர் டி.பி.சத்திரத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications