சேரி பிஹேவியர் காயத்ரியை ஏன் கண்டிக்கவில்லை கமல்.. வலுக்கும் பேஸ்புக் கண்டனங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் நிகழ்த்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், அடுத்தவரை இழிவு படுத்துவதையே தனது வேலையாக கொண்டிருக்கிறார் காயத்ரி ரகுராம்.

அவர் நடிகை ஓவியாவை சேரி பிஹேவியர் என்று திட்டியுள்ளார். அது பிரமோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமல் ஹாசன் ஏன் வாய் திறக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது.

அதனைத் தொடர்ந்து, நேற்று கமல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சேரி பிஹேவியர் குறித்த கேள்விக்கு எஸ்கேப் ஆவது போன்றே அளித்தார். இதற்கு கடும் கண்டனங்கள் பேஸ்புக்கில் எழுந்துள்ளன.

கறுப்புச்சட்டை போட்டுக் கொண்டு..

"கமல் சார் , காயத்ரி ரகுராம் கூறிய சேரி பிஹேவியர் என்ற வார்த்தையை கண்டிக்க முடியாத நீங்கள்

கருப்பு சட்டை போட்டுகொண்டு பெரியார் திடலுக்கு அல்ல ஐயப்பன் கோயிலுக்கு போங்க

சிவப்பு சட்டைய போட்டுகிட்டு சமயபுரம் அம்மா கோயிலுக்கு போங்க" என்று பாலன் குரு கிண்டலடித்துள்ளார்

ஸ்கிரிப்ட் எழுதலைன்னா கேட்க மாட்டிங்கலா

"சேரி பிஹேவியர் பற்றி கேட்டால் நான் திரைக்கதை எழுதவில்லை என்கிறார் (அவர் நடிக்கும் படத்தில் அனைத்து விடயத்திலும் மூக்கை நுழைப்பது ஏன் என்று கேட்கப் படாது!) இன்னொரு இடத்தில் நான் எடுக்கும் முடிவு தான் இறுதியானது என்கிறார்.

வாங்குகிற காசுக்கு மேலே கூவுவது இது தானா கமல் !?" என அகஸ்டின் ஜோசப் சேவியர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முப்பாட்டன் கதையா?

"சேரி பிஹேவியர் என்னுடைய திரைக்கதை இல்லை.-கமல்

ஆமா அது உங்க முப்பாட்டன் திரைக்கதை. " என கதிர் கலாத்துள்ளார்.

சேரி பிஹேவியர்... கமலுக்கு தெரியாமலா இருக்கும்?

"சேரி behaviour " என்று ஒரு நடிகை இன்னொரு நடிகையை சொல்லியுள்ளார். எதையாவது பரபரப்பாக பேசி தொலைக்காட்சியின் ரேட்டிங்கை ஏற்றுவது அல்லது நிகழ்ச்சியை பெரிதாக விளம்பரப்படுத்துவது என்பது மலிவான- கேவலமான உத்தி.

நடிகர் கமல் ஹாசன் முற்போக்காளர் - பகுத்தறிவாளர் என்றெல்லாம் பீற்றிக் கொள்ளுகிறார். அவர் நெறியாளுகை நடத்தும் அந்த நிகழ்ச்சியில் இப்படி ஒரு உரையாடல் இருக்கிறது என்பதை தெரிந்தே அதை 'promo' போடுவது - அதை அனுமதிப்பது என்பது நடிகர் கமலுக்கு அழகல்ல. அந்த மலிவுக்கு ஒத்துப்போவதாகதான் பொருள்! கமலின் இந்த போக்கு அந்த நடிகையின் ( காயத்ரி ) போக்கை விட மோசமானது" என விஜய சந்திர சேகர் கடுமையாக கமலை கண்டித்துள்ளார்.

முற்போக்காளருக்கு அழகல்ல

"சேரி பிஹேவியர் என்றால் என்ன தெரியுமா? மெரினா போராட்டத்தின்போது காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி இரத்தம் சிந்திய இளைஞர்களை பாதுகாத்து தங்களது வாழ்வாதாரத்தையே தொலைத்துவிட்டு நிற்கதியாய் நிற்கிறார்களே அதுதான் சேரி பிஹேவியர்!. காயத்திரி ரகுராமை விட உணரவேண்டியது கமல்ஹாசனும் விஜய் டிவி'யும் தான். டி.ஆர்.பி. ரேட்டிங்கை ஏற்றிக்கொள்ள என்ன கருமத்தை வேணும்னாலும் பண்ணிக்கிட்டிருந்தீங்க... பொறுத்துக்கிட்டோம். ஆனால், வன்கொடுமை வழக்கு தொடுக்கும் வார்த்தைகளை எடிட் செய்யவேண்டிய ஒரு தொலைக்காட்சி இப்படி காயத்திரி ரகுராம்களை பேசவைப்பது நாகரீகமான செயலா?.

முற்போக்காளர் - பகுத்தறிவாளர் என்றெல்லாம் பீற்றிக் கொள்ளும் கமல் ஹாசன் அவர்களே தாங்கள் தொகுப்பாளராக இருக்கும் நிகழ்வில் வன்கொடுமை வார்த்தைகளை தெரிந்தே அதை 'promo' போடுவது - அதை அனுமதிப்பது என்பது முற்போக்காளர் - பகுத்தறிவாளர் என காட்டிக்கொள்ளும் தாங்களுக்கு அழகல்ல.!

கமல் அவர்களே சேரிகள் தானே உருவாகிவிடவில்லை. சேரிகளை உருவாக்கியவர்கள் உங்களவால்தான் ஒய்" என சுந்தர் சிஎன் அண்ணாதுரை குற்றம்சாட்டியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens demands Kamal Haasan to apologize for Gayathri Raguram’s ‘Chery Behavior’ comments.
Please Wait while comments are loading...