கள்ளக்காதல், குடிபோதை, சண்டை... கோழிக்கறி வியாபாரி வெட்டிக் கொலை.. காதலி கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அருகே குடிபோதையில் கோழிக்கறி வியாபாரிக்கும், அவரது கள்ளக்காதலிக்கும் இடைய ராத்திரியில் சண்டை மூண்டது. இதில் கோழிக்கறி வியாபாரியை அவரது கள்ளக்காதலி கொலை செய்து விட்டார்.

சென்னை சோழிங்கநல்லூரைச் சேர்ந்தவர் நாகேஸ்வர ராவ். கோழிக்கடை வைத்துள்ளார். இவருக்கு செல்வபாக்யா என்ற மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனர்.

இவரும், கலையரசி என்பவரும் சிறிது காலமாக கள்ளக்காதலில் மூழ்கியிருந்தனர். கலையரசி கணவரை இழந்தவர். பனையூரில் வசித்து வருகிறார். தினசரி இரவு கலையரசி வீட்டுக்குத்தான் போவாராம் ராவ்.

இன்று காலையில் கலையரசி வீட்டுக்கு வெளியே வந்து தனது கணவரை யாரோ வெட்டிக் கொன்று விட்டதாக கூறி கத்தினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் திரண்டனர். போலீஸாரும் விரைந்து வந்தனர்.

ஆனால் விசாரணையில் கலையரசிதான் இந்தக் கொலையைச் செய்தது என்று தெரிய வந்தது. சரமா்ரியாக ராவை வெட்டிக் கொன்றுள்ளார் கலையரசி. வீடெல்லாம் ரத்தமாக கிடந்தது. ஆனால் கலையரசி மட்டும் இதைத் தனியாக செய்திருக்க முடியாது என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். கலையரசின் இரு தம்பிகளுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

கலையரசியும், ராவும் தினசரி இரவு குடிப்பார்களாம். அவ்வப்போது சண்டை நடக்குமாம். நேற்றும் அப்படித்தான் நடந்துள்ளது. அதன் இறுதியில்தான் ராவ் கொலையுண்டுள்ளார்.

இறந்து போன ராவின் மனைவியும், குழந்தைகளும் அவரது உடலைப் பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+