உ.பி.ரயில் விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்
உத்தரப்பிரதேச ரயில் விபத்து குறி்த்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: மத்திய அரசு பாட்னா ரயில் விபத்து குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, ரயில் தண்டவாளம் தரமானதா, ரயில் பெட்டிகள் தரமானதா மற்றும் நாசவேலையா என்பதை ஆராய்ந்து உண்மை நிலையை விசாரித்து மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,'அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் ரயில் நிலையங்கள், பாதுகாப்பான பயணம் மற்றும் குறைந்த கட்டணம் என்பதால் மக்கள் அனைவரும் ஆபத்தற்றது என்று ரயில் பயணங்களை விரும்புகின்றனர். வியாபாரிகளும் தங்கள் பொருட்களையும் அனுப்புகின்றனர். ரயில் இருப்புபாதைகளையும், ரயில் பெட்டிகளையும், பராமரிக்கவும், பாதுகாக்கவும், வல்லுனர்கள், பொறியாளர்கள், தொழிலாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளனர்.

நாட்டில் உணவுபொருட்கள், இயந்திர பொருட்கள், கூட்ஸ் பெட்டிகளில் கொண்டு செல்லப்படுகிறது. ரயில் போக்குவரத்து ஓய்வு இல்லாமல் நாள் முழுவதும் செயல்படுவதாகும். 20.11.2016 நாளில் உத்திரபிரதேச மாநிலத்தில் இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பதினான்கு பெட்டிகள் தூக்கி எறியப்பட்டு கொடூரமான முறையில் கவிழ்ந்துள்ளது, இதில் 120 பேர் உயிர் சேதம் ஏற்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது, 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
உயிர் இழந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீடும், காயமடைந்தோருக்கு இலவச சிகிச்சையும், உதவிதொகைகளும் வழங்கப்படுள்ளது. ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக விபத்து நடந்ததாக கூறப்பட்டு, மீட்பு பணியும் நடந்துள்ளது. நம்நாட்டில் ரயில் விபத்துக்கள் அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளது, இதை யாவரும் அறிவர். சமீபகாலமாக நடைபெற்ற ரயில் விபத்துக்கள் தண்டவாள விரிசலால் ஏற்பட்ட விபத்துக்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஏன் தண்டவாளங்களில் அடிக்கடி விரிசல் ஏற்படுகிறது, தண்டவாளம் என்ன சிமிண்டால் ஆனதா விரிசல் ஏற்பட, ரயில் தண்டவாளங்கள் தனியாரிடம் வாங்கப்படுகிறது. தரமான இரும்பை கொண்டு செய்வது ரயில் தண்டவாளம். இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் விபத்து அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளது. அதிவேக ரயில் சென்றதால் தண்டவாளத்தில் விரிசல் என்றால், பதினான்கு பெட்டிகள் தூக்கி எறியப்படுமா என்கிற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது.
மேலும் விபத்துக்கு முன் ரயில் எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது என்பதை அறிவிக்கப்படவில்லை. அகலப்பாதை ரயில் வளைவான பகுதிகளில் அதிவேகமாக சென்றால் தண்டவாளத்தை விட்டு பெட்டிகள் தூக்கி எறியப்படும்.
நம்நாட்டில் தீயசக்திகளின் நாசவேலைகளில் இதுவும் ஒன்றா? இதனால் நாசவேலைகள் அரங்கேற்றி இந்தியாவில் மனித உயிர்சேதம், பொருள்சேதம் அடைய தீவிரவாதிகள் செய்யும் நாசவேலையா?.
இதுபோன்ற விபத்துக்களை ரயில்வே அதிகாரிகள் மட்டும் விசாரணை செய்தால் உண்மை மறைக்கப்படலாம். அதனால் மத்திய அரசு இந்த விபத்துக்குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, ரயில் தண்டவாளம் தரமானதா, ரயில் பெட்டிகள் தரமானதா மற்றும் நாசவேலையா என்பதை ஆராய்ந்து உண்மைநிலையை விசாரித்து மக்களுக்கு தெரிவிக்கவேண்டும்'' என்று கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications