எம்.எல்.ஏக்களுக்கு சம்பளத்தை ஏற்றிய கையோடு ஜெ. சமாதிக்குப் போன எடப்பாடியார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சட்டசபைக் கூட்டத்தொடர் நிறைவு பெற்றதை தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. கடந்த 45 நாட்களாக நடைபெற்ற கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது. சபாநாயகர் தனபால் சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

Chief minister Edappadi palanisami paid tribute in the Jayalalitha and MGR Memorial

இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சர்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாட பழனிச்சாமி ஓபிஎஸ் அணியுடன் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என நம்புகிறோம் என்றார்.

மேலும் ஜெயலலிதாவின் சொத்துகளை நாட்டுடைமையாக்க வேண்டும் என்பது அதிமுக எம்.எல்.ஏ.வின் சொந்த கருத்து என்றும் அவர் கூறினார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் எம்ஜிஆர் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chief minister Edappadi palanisami paid tribute in the Jayalalitha and MGR Memorial.Ministers also paid tribute after the conclusion of Tamil Nadu Assembly.
Please Wait while comments are loading...