செம்மரம் வெட்ட அழைத்து செல்லும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடியார் உத்தரவு
சென்னை: செம்மரம் வெட்ட தமிழர்களை அழைத்து செல்லும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றுள்ளார்.

மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களும் காவல்துறை அதிகாரிகளும் இரு துருவங்களாக இல்லாமல் இரு கண்களாக இருந்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில் ஆந்திர வனப்பகுதிக்கு தமிழர்களை செம்மரம் வெட்ட அழைத்து செல்லும் இடைத்தரகர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார்.
அண்மைக்காலமாக ஆந்திராவுக்கு தமிழர்கள் செம்மரம் வெட்ட அழைத்து செல்லப்படுவதும், அவர்கள் மர்மமாக உயிரிழப்பதும் அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுபோன்ற ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!