கிருஷ்ணா நதி நீர் வேண்டி ஆந்திராவுக்குப் படையெடுக்கும் முதல்வர் ஓபிஎஸ்!
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து பேச தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆந்திரா செல்கிறார். அம்மாநில தலைநகர் அமராவதியில் முதல்வர் சந்திரபாபுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து பேச நாளை ஆந்திரா செல்ல இருக்கிறார். அம்மாநில தலைநகர் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் அவர் பிற்பகல் 1 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப்போனதால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை உட்பட மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.

சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் மூலம் ஓரளவிற்கு குடிநீர் பிரச்சினை தீர்க்க முடியும். இந்த ஆண்டிற்கான தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடக்கோரி கடந்த வாரம் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதினார். இதனையடுத்து கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கிருஷ்ணா நதிநீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நாளை ஆந்திரா செல்கிறார். அம்மாநில தலைநகர் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவர் சந்தித்து பேச உள்ளார். தமிழக முதல்வர் ஒருவர் நதிநீர் பிரச்சனைக்காக ஆந்திரா செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications