புதிய திட்டங்கள் பற்றிய ஐடியாக்களை அரசுக்கு அனுப்புங்க! அரசு அதிகாரிகளுக்கு ஸ்டாலின் ஃபுல் ஃபிரீடம்!
விழுப்புரம்: அரசின் ஆணைகளை மட்டும் செயல்படுத்துபவர்களாக இல்லாமல் நீங்கள் செயல்படுத்த விரும்பும் புதிய திட்டங்களையும் அரசிற்கு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கும், அரசு உயர் அதிகாரிகளுக்கும் முழு சுதந்திரம் வழங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அரசு உங்கள் நல்ல பணிக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்ற உறுதியையும் அவர்களுக்கு வழங்கியுள்ளார்.
விழுப்புரத்தில் 3 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி கள ஆய்வு நடத்திய ஸ்டாலின், அந்தக் கூட்டத்தில் பேசியதாவது;

''கோட்டையில் எனது அறையில் டேஷ்போர்டு வைத்துள்ளேன். ஒவ்வொரு திட்டமும் எந்தளவு முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை அதன் மூலமாக அவ்வப்போது அறிந்தும் வருகிறேன்.
அதேபோல் மாவட்ட அளவிலும் உங்களுக்கு அத்தகைய கண்காணிப்பு மிகமிக அவசியம். தொடர்ச்சியாக கண்காணித்தாலே எந்தத் திட்டமாக இருந்தாலும் அது சிறப்பாக நிறைவேறிவிடும்.
மாவட்ட நிருவாகம் என்பது மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள அமைப்பாகும். எல்லாத் திட்டங்களும் மாவட்ட அதிகாரிகளாகிய உங்கள் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அவை எந்தளவுக்கு விரைவாக சென்றடைகிறது என்பது உங்கள் திறமையை பொறுத்தது. நீங்கள் நல்ல திறமைமிக்க அலுவலர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். அதன்மூலம் மக்கள் நற்பயன் பெற வேண்டும்.

உங்களுக்கு மேலே உள்ள அதிகாரிக்கும், உங்களுக்கும் ஒருங்கிணைந்த செயல்பாடு இருப்பதைப் போல உங்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் அலுவலர்களோடு அதே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்.
மக்களோடு பழகி அவர்களின் தேவை அறிந்து செயலாற்றுங்கள். அவர்களின் பாராட்டினை பெறும் வகையில் உங்கள் பணி அமைய வேண்டும். அரசின் ஆணைகளை மட்டும் செயல்படுத்துபவர்களாக இல்லாமல் நீங்கள் செயல்படுத்த விரும்பும் புதிய திட்டங்களை அரசிற்குச் சொல்லி முன்மொழிவுகள் அனுப்புங்கள்.
அரசு உங்கள் நல்ல பணிக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்து, இந்த அளவில் என் உரையை நிறைவு செய்கிறேன்.''
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications