ரூ.50000 தரும் தமிழக அரசு.. முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்.. வெளியான அறிவிப்பு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் படி 2 பெண் குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 2 குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் தொகைக்கு 2 டெபாசிட் பத்திரங்கள் வழங்கப்படும். இதற்கான முதிர்வு தொகையை அந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தி அடையும் போது பெற்றுக் கொள்ளலாம். இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

"சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் சமூக நல விரிவாக்க அலுவலர் மற்றும் மகளிர் ஊர் நல அலுவலரை நேரில் அணுகி இணையதளம் மூலமாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த திட்டத்தில் பயன் பெற 1 பெண் குழந்தை அல்லது 2 பெண் குழந்தைகளுடன் கணவனோ அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். 2-வது பெண் குழந்தை பிறந்து 3 வயது பூர்த்தி அடையும் முன் விண்ணப்பிக்க வேண்டும். முதல் பெண் குழந்தைக்கு பிறகு 2-வதாக இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
ஒரு பெண் குழந்தையுடன் கணவரோ அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்திருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ.50 ஆயிரத்திற்கான டெபாசிட் பத்திரம் வழங்கப்படும். 2 பெண் குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 2 குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் தொகைக்கு 2 டெபாசிட் பத்திரங்கள் வழங்கப்படும். முதலில் பெண் குழந்தை பிறந்து 2-வது பிரசவத்தில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருந்தால் 3 குழந்தைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரத்திற்கு 3 டெபாசிட் பத்திரங்கள் வழங்கப்படும்.இதற்கான முதிர்வு தொகையை அந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தி அடையும் போது பெற்றுக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் போது தாய் தந்தையரின் மாற்றுச் சான்றிதழ், திருமண பத்திரிகை, குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருப்பதற்கான வருமான சான்று, இருப்பிட சான்று, சாதி சான்று, ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று, ஆண் குழந்தையை தத்தெடுக்க மாட்டோம் என உறுதிமொழி பத்திரம், குடும்ப புகைப்படம், குடும்ப அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களை இணைக்க வேண்டும். இது தொடர்பாக மேலும் விவரங்கள் பெற தர்மபுரி மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04342-233088 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பு 2026! விடுபட்ட அனைத்து நில அளவை எண்களுக்கும் மாற போகும் புதிய ரூல்ஸ் -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications