உடைந்த பலூனை விழுங்கி உயிரிழந்த குழந்தை – பெரம்பலூரில் பரிதாபம்!
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் பலூனை சாப்பிட்ட குழந்தை ஒன்று மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி பாசமலர்.
இவர்களுக்கு உதயகுமார் மற்றும் பிறந்து 8 மாதமே ஆன ஆண் குழந்தை பிரவீன்குமார் என இரண்டு குழந்தைகள் இருந்து வந்தனர்.
ஊதப்பட்ட பலூன்:
இந்த நிலையில் நேற்று சிறுவன் உதயகுமார் காற்று ஊதப்பட்ட பலூனை வைத்து கொண்டு விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென பலூன் வெடித்தது.
வெடித்துக் கிழிந்த பலூன்:
இதில் பலூன் இரண்டு மூன்று துண்டுகளாக கிழிந்து பல்வேறு இடங்களில் சிதறிக் கிடந்தது. பலூன் துண்டுகளை வீட்டில் உள்ளவர்கள் அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டனர்.
விழுங்கிய குழந்தை:
அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பிரவீன்குமார் பலூன் ரப்பர் துண்டுகளை எடுத்து விழுங்கினான். சிறிது நேரத்தில் தொடர்ந்து அழுத குழந்தை பிரவீன்குமார், பின்னர் மயங்கினான்.
உயிருக்கு போராடிய குழந்தை:
இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரவீன்குமாரை அருகில் உள்ள கொளக்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
மூச்சுத்திணறலால் பலி:
அங்கு பிரவீன்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மேலும் குழந்தை பலூனை விழுங்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை:
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீஸ் வழக்கு பதிவு செய்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பலூனை விழுங்கி குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications