நெல்லை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரோடு மீட்பு!! ரோபோ மூலம் மீட்கப்பட்டான்!!
நெல்லை: சங்கரன்கோவில் அருகே குத்தாலபேரி என்ற இடத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2வயது குழந்தை ஹர்ஷன் உயிரோடு மீட்கப்பட்டான். அண்மையில் கண்டுபிடிக்கப்பட ரோபோ மூலம் சிறுவன் மீட்கப்பட்டான்.
கடந்த ஒருவாரத்துக்கு முன்புதான் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே பள்ளகச்சேரி கிராமத்தில் 3 வயது சிறுமி மதுமிதா, ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. அந்த குழந்தையை மீட்க பல மணி நேரம் போராட்டம் நடத்தினர்.

ஆனால் குழந்தையை உயிரோடு மீட்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த குத்தாலபேரி என்ற இடத்தில் ஆழ்துளை கிணற்றில் 2 வயது ஆண் குழந்தை ஹர்ஷன் தவறி விழுந்தான்.
கணேசன் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் எலுமிச்சை தோட்டத்துக்கு தனது குழந்தை ஹர்ஷனுடன் இன்று காலை சென்றார். கணேசன் தோட்டப்பணிகளை கவனித்துக் கொண்டிருந்த போது திடீரென ஹர்ஷனின் அழுகுரல் கேட்டது.
இதைத் தொடர்ந்து சப்தம் கேட்ட பகுதிக்கு சென்றுப் பார்த்தப் போது 100 அடி ஆழமுள்ள கிணறுக்கு சப்போட்டாக அமைக்கப்பட்ட 300அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் ஹர்ஷன் தவறி விழுந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து உடனடியாக சின்னகோவிலான் குளம் காவல்துறைக்கும், சங்கரன் கோவில் தீயணைப்பு துறையினருக்கும் கணேசன் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.
சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், சுரண்டை, கடையநல்லூர் பகுதிகளில் இருந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் 15 அடி ஆழத்தில்தான் சிக்கியிருந்தது.
இதனால் மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு ரோபோ எந்திரம் மூலம் குழந்தை மீட்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் ரோபோ மூலம் குழந்தை முதல் முறையாக மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications