திருச்சி அருகே 13 வயது சிறுமிக்கு திருமணம்... பெற்றோருக்கு போலீஸ் 'காப்பு'
திருச்சி: தொட்டியம் அருகே 13 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரையும் , சிறுமியின் பெற்றோரையும் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள சுள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கும் நாமக்கல் மாவட்டம், சந்தைமேட்டைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமிக்கும் கடந்த மாதம் 22-ஆம் தேதி திருமணம் நடந்தது.

இதுகுறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினர், நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து ஆய்வாளர் ஜெயந்தி, சிறுமியைத் திருமணம் செய்த செல்வராஜ், சிறுமியின் பெற்றோர் மாதேஸ்வரன், ஜானகி ஆகியோரை கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த பிறகு செல்வராஜ், மாதேஸ்வரன் இருவரையும் நாமக்கல் கிளைச்சிறையிலும், ஜானகியை சேலம் பெண்கள் சிறையிலும் அடைத்தனர்.
மேலும், தலைமறைவான செல்வராஜின் பெற்றோர் செல்லப்பன், சின்னம்மாள் ஆகிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications