ஓவியப் போட்டி.. கலை நிகழ்ச்சிகள்.. தேவகோட்டையில் களை கட்டிய சிறுவர்கள் தினம்
தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் சிறுவர்கள் தினத்தையொட்டி ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
தேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவர் ரஞ்சித் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஓவிய போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் கிஷோர் குமார், காயத்ரி, நித்ய கல்யாணி, கிருத்திகா, தனுதர்ஷினி ஆகியோருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிறைவாக மாணவி ராஜி நன்றி கூறினார்.

மத்திய நிலத்தடி நீர் வாரியம் போட்டிக்கு பள்ளி அளவிலான தகுதி தேர்வு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் நீர் வாரியத்தால் நடத்தப்படவுள்ள போட்டிக்கு மாணவர்களை தேர்வு செய்யும் தகுதி போட்டி நடைபெற்றது.

மத்திய நீர் வாரியம் சார்பில் நீரை சேமிப்போம், வருங்காலம் காப்போம் என்ற தலைப்பில் நீர் வண்ண பூச்சு ஓவிய போட்டிகள் நடைபெற்றது. 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் இந்த போட்டியில் பள்ளி அளவில் கலந்துகொண்ட 60 க்கும் மேற்பட்ட மாணவர்களில் மாநில அளவில் கலந்துகொள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

போட்டிக்கான நிகழ்ச்சியில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளில் மூவரை தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது.
8ம் வகுப்பு மாணவி பரமேஸ்வரி முதல் பரிசும், அதே வகுப்பை சார்ந்த மாணவி பிரவீனா இரண்டாம் பரிசும், 6ம் வகுப்பு மாணவி காயத்ரி மூன்றாம் பரிசும் பெற்றனர். நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications