ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த வந்து சசிகலா புகழ் பாடிய தாணு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் தமிழகத்திற்கு தலைமையேற்க வருமாறு சசிகலாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார் தாணு.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். சென்னை பல்கலைக்கழத்தில் இருந்து ஊர்வலமாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் திரையுலகினர் மலர்கள் தூவியும் தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதிலும் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் தினசரியும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மொட்டை போட்டும் படையல் போட்டும் கண்ணீர் மல்க தொண்டர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

19வது நாளான இன்று அதிமுக தொண்டர்கள் காலை முதலே ஜெயலலிதா சமாதியில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மொட்டை போட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற திரை உலகத்தினர் ஜெயலலிதா நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அனைவருமே உள்ளே சென்று மலர்கள் தூவியும் தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
அதிமுக தொண்டர்கள் கொண்டு வரும் பூக்களை கூட அலட்சியமாக வாங்கி எறிந்து விடுகின்றனர். திரை உலக பிரபலங்களுக்கு மட்டும் உள்ளே சென்று அஞ்சலி செலுத்த அனுமதி தருகின்றனர்,
செய்தியாளர்களிடம் பேசிய தாணு, எடுத்த எடுப்பிலேயே சின்னம்மா கட்சிக்கு தலைமையேற்க வேண்டும், தமிழகத்தை சின்னம்மா வழி நடத்த வேண்டும் என்றார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் காலை உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறினார்.
ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் சசிகலாவை தலைமையேற்க அழைப்பு விடுத்தது ஏன் என்று தொண்டர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications