அரசியலைப் பற்றி வருங்கால தலைமுறை என்ன நினைக்கும்... ஒன்இந்தியா வாசகர்களுக்கு சோ சொன்ன பதில் என்ன?
ஒன்இந்தியா தமிழ் இணையதளத்துக்கு முன்பு வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார் மறைந்த சோ ராமசாமி. அதுகுறித்த பிளாஷ்பேக்.
சென்னை: மூத்த பத்திரிகையாளர், அரசியல் ஆலோசகர், சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி மிகச் சிறந்த எதார்த்தவாதி என்ற வார்த்தைதான் சோவுக்கு மிக மிகப் பொருத்தமாக இருக்க முடியும்.
எந்தத் துறையாக இருந்தாலும், அதில் எந்தக் கேள்வி கேட்டாலும் டக்கென தனது ஸ்டைலில் நக்கல், நையாண்டி மிளிர சோ அளிக்கும் பதிலே தனிதான்.

முன்பு ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து வந்தார் சோ. வாசகர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் அனைத்தும் முத்துக்கள்...
அதிலிருந்து சில...
கே: இன்றுள்ள இந்திய அரசியலைப் பற்றி, வருங்கால அல்லது அடுத்ததலைமுறையினர் என்ன நினைப்பார்கள்...?
ப: கவலை வேண்டாம். ஒன்றும் தப்பாக நினைக்க மாட்டார்கள். சொல்லப் போனால் வருங்காலத் தலைமுறையினர் எதைப் பற்றியும் ஒன்றுமே நினைக்க மாட்டார்கள்.அந்த அளவுக்கு அவர்களை இப்போதே மழுங்க அடித்துக் கொண்டு வருகிறோம்.
கே: மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும்? அ.தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும்?
ப: தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அ.தி.மு.க.வினர் மீதான வழக்குகள் தொடரும். அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தி.மு.க.வினர் மீதான வழக்குகள்ஆரம்பிக்கும்.
கே: பெண் என்பவள் எப்படித்தான் இருக்க வேண்டும்? அதையாவது கூறுங்களேன்...?
ப: இருக்க வேண்டும் - என்று நீங்கள் தீர்மானித்து விட்ட பிறகு, உங்களோடு பேசி பிரயோஜனமில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications