உடல்நலக் குறைவு... மூத்த பத்திரிகையாளர் சோ சென்னை அப்பல்லோவில் அனுமதி
மூத்த பத்திரிகையாளர் சோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: மூத்த பத்திரிகையாளர் சோ உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் மற்றும் மூத்த பத்திரிகையாளரான சோவுக்கு முதுமையால் அண்மைக்காலமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சோ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது முதல்வர் ஜெயலலிதா சோவை சந்தித்து உரையாடினார். அது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையும் ஏற்பட்டது. பின்னர் ஏப்ரல் மாதம் மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் சோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று சோவுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைகாக சோ சேர்க்கப்பட்டிருக்கிறார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்தான் முதல்வர் ஜெயலலிதா 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications