ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
சென்னை: குடிமை பணித் தேர்வுகளில் எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்துக்கும் முக்கியத்துவம் வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் குடிமைப் பணித் தேர்வின் முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam) எழுதும் நடைமுறையில் மாற்றம் வேண்டும் என்று அனைத்து மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முதல் நிலைத் தேர்வில் நடத்தப்படும் சி-சாட்(C-Sat - Civil Services Aptitute Test) எனப்படும் திறனாய்வுத் தேர்வு ஆங்கில மொழியில் மட்டுமே நடத்தப்படுகிறது. சி-சாட்1, சி-சாட் 2 ஆகிய தலா 200 மதிப்பெண்களைக் கொண்ட இரண்டு வினாத்தாள்களில் சி-சாட் 2, ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களால் மட்டுமே எழுதக் கூடிய வகையில் மிகவும் கடினமாக இருக்கிறது.
முதல்நிலைத் தேர்வில் நடத்தப்பெறும் திறனறித் தேர்வில், ஆங்கில மொழிப் பயிற்சி உள்ளவர்களால் எளிதில் எழுதி வெற்றி பெற்று அடுத்த கட்டத் தேர்வுகளுக்குச் செல்ல முடியும். ஆனால், ஆங்கிலம் கற்கமுடியாத ஏனைய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டு, முதல்நிலைத் தேர்விலேயே தோல்வி அடைந்து வருகின்றனர்.
தாய்மொழியில் திறனறித் தேர்வு நடத்தினால் கிராமப்புற மாணவர்கள், குடிமைப் பணி தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற முடியும். கடந்த 2010-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு திறனாய்வுத் தேர்வை ஆங்கிலத்தில் நடத்தும் முறையைக் கொண்டு வந்தபோதே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
2012ல் நீதிமன்றம் தலையிட்ட பின்னர், இது குறித்து ஆய்வு செய்ய, மார்ச் 2014ல் மூன்று உறுப்பினர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கை இன்னும் தயாராகவில்லை. இதற்குள் ஆகஸ்டு 24-ஆம் தேதி குடிமைப் பணிக்கான முதல் கட்டத் தேர்வுகளை நடத்த தேர்வாணையம் நுழைவுச் சீட்டுகளை ஜூலை 24ம் தேதி முதல் வழங்கத் தொடங்கி இருக்கின்றது.
அரசியல் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் யு.பி.எஸ்.சி. முதல்கட்ட திறனாய்வுத் தேர்வை மாணவர்கள் எழுதும் வகையில் மத்திய அரசு மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதுவரையில் ஆகஸ்டு 24 ஆம் தேதி நடத்த இருக்கும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முதல் கட்டத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications